திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி
​ Thiruvalluvar Tamil Academy

A 501 ( c ) ( 3 ) Non-profit Organization for Tamil Education.
வணக்கம்,
                               திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்கு வருக வருக என்று தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ்மொழி நமது தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடித்தளம். அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப் பள்ளிகள்.
நமது தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நமது அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது நமது முக்கியமான கடமைகளுள் ஒன்று. இந்த அரும்பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறது.
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி (Thiruvalluvar Tamil Academy (TTA)) ஒரு மதச்சார்பற்ற, லாபநோக்கமில்லாத (கலிபோர்னியா மாகாணம்) தன்னார்வலர் சார் அமைப்பு.
நமது பள்ளி International Tamil Academy (ITA, Formerly Known as CTA)-வுடன் இணைக்கப்பெற்ற பள்ளி.
வகுப்புகள் 12 நிலைகளாக குழந்தைகளின் வயதின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது (3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கைக்கு தகுதியானவர்கள்). வகுப்புகள் வெள்ளிக்கிழமைகளில் மாலையில் 6:00 PM முதல் 7:45 PM வரை 1509 Sierra Gardens Dr, Roseville, CA 95661 என்ற முகவரியில் நடைபெறுகிறது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளை தமிழ்ப் பள்ளியில் சேர்த்து பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு thiruvalluvartamilacademy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.